
மக்களுக்கும் நாட்டிற்கும் பயன ளிக்கக்கூடிய சேது சமுத்திரத் திட்டத்தை முடக்குவதற்காக இந் நாட்டின் உயர்சாதி ஆதிக்க கும்பல் செய்யும் அட்டூழியம் பொறுமையு டையோரையும் பொங்கியெழச் செய்யும். இயற்கையாய் உருவான மணல் திட்டை லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னாள் குரங்கு களால் கட்டப்பட்ட இராமர் பாலம் என்று கதை சொல்லி இந்த நாட்டின் உச்சநீதிமன்றம் வரை அதை ஆமோதிக்க வைத்திருக்கும் கொடுமை கல்வியறிவற்ற ஆப் பிரிக்க நாடுகளில் கூட நடக்காது.
மத்திய அரசை இயக்கிவரும் அரசியல் சூத்திரதாரி, தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி, தற்போதும் தமிழகத்தை ஆண்டுவரும் கலை ஞரால் கூட சேது சமுத்திர திட் டத்தை நிறைவேற்ற முடியவில்லை என்றால் இந்த நாட்டை ஆண்டுக் கொண்டிருப்பது மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசாங்கங்களா? அல்லது உயர்சாதி ஆதிக்கக் கும்பலா? என்கிற கேள்வி ஒவ் வொரு இந்தியக் குடிமகனின் மனதிலும் தொக்கி நிற்கிறது.
தமிழக முதல்வர் கலைஞர் தனது பிறந்த நாள் செய்தியில் சேது சமுத்திர திட்டத்தை பெயர் மாற்றி சேதுராம் என்று நிறைவேற்றி னால்கூட போதும் என்று கூறியது ஆச்சரியத்தை மட்டுமல்ல, அதிர்ச்சி யையும் ஏற்படுத்தியது. கலைஞரின் அறிவிப்பு ஆதிக்க சக்திகளிடம் சரணாகதி அடைந்து விட்டதை காட்டுகிறதா? அல்லது இதுவும் ஒருவகை இராஜதந்திரமா? எனப் புரியவில்லை.
எவ்வளவோ திட்டங்களை அரசாங்கங்கள் கொண்டு வந்தும் கூட மக்கள் விரோத தன்மையி னால் அவையெல்லாம் வெகுஜன புரட்சியினால் செயல்பட முடியாமல் போனதுண்டு. ஆனால் வெகுஜன மக்களால் வரவேற்கப்படுகிற ஓர் அரசு திட்டத்தை இந்நாட்டின் சிறு பான்மையிலும் சிறுபான்மையான ஒரு கூட்டத்தால் புராணங்களின் பெயரை சொல்லி தடுக்க முடிகிற தென்றால் இச்சதிகாரர்களின் கைக ளில்தான் இன்றளவும் ஆட்சி, உண்மையான ஆட்சி, அதிகாரங் கள் இருப்பது தெளிவாகிறது. ஆட்சியில் இல்லாமலேயே எந்த மக்கள் செல்வாக்கும் இல்லாம லேயே அமைச்சரை பதவியிழக்க வைக்கவும் ஆட்சியாளர்களை பயமுறுத்தவும் இந்த நரிகளால் முடிகிறது. இவர்களை திருப்தி படுத்துவதற்காகவே சிறுபான்மை மக்களை தீவிரவாதிகள் என முத்திரை குத்தும் அளவுக்கு கீழிறங்குகின்றனர். சிறுபான்மை மக்களின் ஓட்டை தின்னு கொழுத்தவர்கள்.
ஆனால் ராமர் பெயரைச் சொல்லி பாபரி மஸ்ஜிதை இடித்த கயவர் கும்பல் சேது சமுத்திர திட் டத்தை முடக்குவதை முஸ்லிம் சமுதாயம் இனியும் வேடிக்கைப் பார்க்கத் தயாராய் இல்லை. உச்ச நீதின்றம் உறுதிமொழி அளித்தும், ராணுவத்தின் கண்முன்னே பாபரி பள்ளியை கடப்பாரைக்கு காவு கொடுத்த சமுதாயம், ஆதம் பாலத்தை இராமர் பாலமாக்கி வரலாற்று மோசடியை செய்தபோது வேடிக்கைப் பார்த்த சமுதாயம் கிளர்ந்தெழும் நாள் வெகுதொலை வில் இல்லை.
ஆட்சியில் உள்ளவர்கள் ஆயிரம் சால்ஜாப்புகள் சொல்லலாம். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்கள் கிளர்ந்து எழுந்தால் அவதார கதை விடும் அரைவேக்காடுகள் அழி வது மட்டும் உறுதி.
ராமர் பெயர் சொல்லி ஆட்டம் போடும் ஆதிக்கக் கும்பல் அதற் குள் அடங்குவது நல்லது.
No comments:
Post a Comment