Sunday, July 27, 2008

எம்.பிகளின் குதிரை பேரம்! கேவலப்பட்ட ஜனநாயகம்!!



இந்திய இறையாண்மையின் மீது அணு சக்தி என்னும் ஒப்பந்த விசையை செலுத்தி இந்திய ஜனநாய கத்தை உடைத்தெறிய அமெரிக்கா கடும் முயற்சி எடுத்துள்ளது. படிப்புக் காக, அமெரிக்காவுக்கு ஏற்றுமதியான அறிவுஜீவிகள் இன்று அந்நாட்டின் அடிமை ஏவல்களாக மாறியிருப்பதும் அவர்களே ஜனநாயகத்துக்கு வேட்டு வைக்கும் ஆட்சியாளர்களாக நாடாளுமன்றத்தை அடைத்து நிற்பதும், நம் தேசத்தின் கவலையாகும்.
'அணிசேராமை' என்ற சர்வதேச அரசியல் கொள்கையை உருவாக்கிய நாடுகளில் ஒன்று இந்தியா. அமெரிக்கா உலகின் ஒரே வன்சக்தி என்ற நிலையில், அணிசாரா நாடுகளின் நடுநிலைமை நழுவி விட்டது.
இந்த வழுக்களில் அதிகம் சறுக்கி விழுந்த நாடு இந்தியா. செப்டம்பர் 11 நிகழ்வுக்குப் பிறகு பாஜக அரசுதான், முஸ்லிம் எதிர்ப்புக்காக அமெரிக்கா வுடன் அதிகம் நெருக்கம் கொண்டது. அந்த நெருக்கம் தான் இன்று, இந்திய இறையாண்மையின் மீது தாக்குதல் தொடுக்கும் தைரியத்தை அமெரிக்கா வுக்கு கொடுத்திருக்கிறது.
இடதுசாரிகள் சுட்டிக் காட்டுவது, இந்திய வெளியுறவுக் கொள்கையில் தலையிடும் 'ஹைடு' சட்டம் பற்றித்தான். யாரும் ஒப்பந்தமே வேண்டாம் என கூறவில்லை. இந்திய அரசியலை கட்டுப்படுத்தாமலும், சில மாற்றங்க ளுடனும், அது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான் கோரிக்கை. இந்த ஹைடு சட்டம் ஈரானோடு உள்ள இந்திய உறவை சீர்குலைக் கிறது. மன்மோகன்சிங் பிரதமரானதும் சொன்ன வார்த்தைகள் வன்முறையா னவை. அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்புப் போரில் இந்தியா பங்கு பெரும் என்றார். அமெரிக்காவின் அத்தகையப் போர் என்பது பொய் யான குற்றச்சாட்டுகளால் முஸ்லிம் நாடுகளை அபகரிப்பது தான். அதை தான் ஆதரிப்பதாக மன்மோகன் சிங் கூறினார். பதவியேற்ற போதே கூறிவிட்டார். அதனால்தான் ஹைடு சட்டம் மன்மோகன் சிங்கையோ, அவரது கூட்டாளிகளையோ உறுத்த வில்லை.

சோனியாகாந்தி அமெரிக்கா சென்றிருந்த போது, 'அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள் தேச விரோதிகள்' என்று குறிப்பிட்டார்.
இன்று ஜனநாயகம், நாடாளு மன்றம் இவற்றின் மரியாதை முற்றி லும் தோற்க்கடிக்கப்பட்டுள்ளது. 'குதிரை பேரம்' என்று சொல்லப்ப டும் அளவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தலா 100 கோடிக்கு விலை போயுள்ளதாக கூறப்படுகிறது.
முலாயம் சிங், அணு ஒப்பந்தத்தை விமர்சித்து வந்தவர். தற்போது, மன்மோகன் அரசை காப் பாற்றி, அமெரிக்காவுக்கு சாதகமான ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீர்வது என்பதில் முலாயம் சிங்கும், அமர்சிங்கும் உறுதியாக உள்ளனர். இந்த இசைவுக்கு எத்தனை கோடி விலை பேசப்பட்டது?
தனது மகனுக்கு அமைச்சர் பொறுப்பு தராததால் தேவகௌடா எதிர் அணி யில் இணைகிறார். சிபு சோரனும் பேரம் பேசி காங்கிரஸுக்கு ஆதார வளித்து விட்டார்.
முலாயம் கட்சியைச் சேர்ந்த முனவர் ஹுசைன் என்பவர் காங்கி ரஸ்காரர்கள் தன்னிடம் 25 கோடி ரூபாய் தருவதாக பேரம் பேசினார்கள் என ஒரு குண்டை தூக்கிப் போட்டார். தொடர்ந்து அடுத்தடுத்த தினங்களில் பேரம் 100 கோடிகளை தாண்டியது என்றும் கூறப்படுகிறது. இது முற்றிலும் ஓர் அரசியல் சூதாட்டமே.
பிரதமர் மன்மோகன் சிங்கை முகேஷ் அம்பானி சந்தித்துப் பேசிய விஷயம் கசிந்த போது, குதிரை பேரம் உண்மை தான் என கருதப்பட்டது. நெருக்கடியான காலத்தில் அரசியல் வாதிகளுக்கு சில பல கோடிகளை எடுத்து வீசிவிட்டு, பல்லாயிரம் கோடிக்கு ஒப்பந்தங்களில் கையெழுத்து வாங்கி நாட்டையும் நாட்டு மக்கள் உழைப்பையும் சுரண்டுபவர்கள் இவர் கள். எதிர்முனையில் பாஜகவும், கருநாடகத்தின் சுரங்க உரிமையாளர் ஜனார்த்தன ரெட்டியின் கோடிகள் மூலம் எம்பிக்களை விலைக்கு வாங்கி ஆட்சி யைக் கலைக்க முயல்வதாகவும் கூறப்பட்டது.
ஒரு முறை நரசிம்மராவ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, ஒரு நாள் தாம தமாகவே வாக்கெடுப்பு நடத்தப் பட்டது. அந்த 24 மணி நேர இடை வெளியில் ஒரு ஆதரவு பேரம் பேசி முடிக்கப்பட்ட வரலாறும் உண்டு.
இந்திய அரசியலுக்கும், தரகு முதலாளிகளுக்குமான கள்ளத் தொடர் புக்கு நீண்ட வரலாறு உண்டு. ஆனால் அவை இதுவரை திரை மறைவு நடவடிக்கைகளாக இருந்து வந்தன.
இன்று அது பகிரங்கமாக வெளிப் பட்டுள்ளது. தேர்தல்களின் போது கோடிகளை கொட்டிக் கொடுத்து கட்சிகளை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திக் கொள்ளும் தொழில் அதிபர்கள் அந்த ஆட்சிகளுக்கு ஒரு ஆபத்து வரும் போது மீண்டும் கோடிகளை கொண்டு அவற்றை காப்பாற்றுகின்றனர். தொழில் அதிபர்களுக்கும் அரசியல்வாதிக்கும் இடையே ஒரு சர்வதேச உறவும், வர்த்தகமும் இருந்து வருகிறது. அதனால், உலகப் பணக்காரர்கள் ஒன்று கூடி தீர்மானிக் கும் ஒரு சம்வத்தில் 'ஜனநாயகம்' பேசும் சாமானியனின் நம்பிக்கை பறிபோகிறது. ஜனநாயகம் பணநாயகத் தின் முன் தோற்கிறது. தேர்தல் காலங் களில், தான் விரும்பும் கட்சி இது, தான் நேசிக்கும் வேட்பாளர் இவர் என்று தேர்ந்தெடுத்து சட்டமன்றங் களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் அனுப்பி வைக்கும் உழைக்கும் மக்களின் நிலை பரிதாபகரமானது. மக்களாட்சி மீது மக்கள் கொண்ட நம்பிக்கை நாசமாகிறது.

Saturday, July 19, 2008

நம்பிக்கை வாக்கெடுப்பின் பொழுது இடதுசாரிகளின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் - திமுகவிடம் தமுமுக கோரிக்கை

நம்பிக்கை வாக்கெடுப்பின் பொழுது இடதுசாரிகளின் நிலைப்பாட்டிற்கு திமுக வாக்களிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கடிதம் எழுதியுள்ளார் அதன் விபரம் வருமாறு:
வரும் ஜூலை 22 அன்று நாடாளுமன்றத்தில் அமெரிக்காவுடனான அணுஆற்றல் உடன்பாடு தொடர்பாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போது நாட்டு நலன் கருதி இடதுசாரி கட்சிகளின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாகத் திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்..

அமெரிக்காவுடனான அணு உடன்பாடு முஸ்லிம்களின் நலனுக்கு எதிராக இருப்பதால் முஸ்லிம் அமைப்புகள் அதனை எதிர்த்து வருவதாக ஒரு தவறான பிரச்சாரம் நாட்டில் செய்யப்பட்டு வருகின்றது. முஸ்லிம்கள் மட்டும் அல்லாது நாட்டில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஒட்டுமொத்தமாக நாட்டு மக்கள் அனைவருக்கும் கேடு விளைவிக்கக் கூடியதாக அமெரிக்காவுடன் மன்மோகன் சிங் அரசு செய்வதற்கு உத்தேசித்துள்ள 123 உடன்பாடும், அந்த உடன்பாட்டிற்கு வழிவகுக்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள ஹைட் சட்டமும், சர்வதேச அணு ஆற்றல் முகைமையுடனான உடன்பாடும் அமைந்துள்ளன. 123 உடன்பாடு அதற்கு நிபந்தனையாக அமைந்துள்ள ஹைட் சட்டமும் நமது நாட்டின் இறையாண்மைக்கும், தன்னிச்சையான செயல்பாட்டிற்கும் உலை வைப்பதாக அமைந்துள்ளன. அமெரிக்காவில் இயற்றப்பட்ட இச்சட்டத்தின் விதிமுறைகளை இந்தியா எவ்வாறு கடைபிடிக்கின்றது என்பது குறித்து ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அந்நாட்டு அதிபர் அறிக்கை அளிக்க வேண்டும் என்று அச்சட்டம் கூறுகின்றது. மேலும் இந்தியாவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கையில் தலையிடும் வகையில் இச்ச்சட்டத்தின் விதிமுறைகள் அமைந்துள்ளன. சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில் 1947ல் பிரட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து நாம் பெற்ற விடுதலையை, அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் அடகுவைக்கும் வகையில் இந்த உடன்பாடு அமைந்துள்ளது.

இந்திய அணு ஆற்றல் ஆணையத்தின் முன்னாள் தலைவர்களான
ஹெச். என். சேத்னா, எம். ஆர். சீனிவாசன், பி.கே. அய்யங்கார், அணு ஆற்றல் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் ஏ. கோபாலகிருஷ்ணன், பாபா அணு ஆய்வு நடுவத்தின் முன்னாள் இயக்குனர் ஏ.கே. பிரசாத், இந்தியா அணு ஆற்றல் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் நிர்வாக இயக்குனருமான வை. எஸ். ஆர். பிரசாத், இந்திரா காந்தி அணு ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் பிளேசிட் ரொட்ரிக்ஸ் ஆகிய இந்தியாவின் புகழ் பெற்ற விஞ்ஞானிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹைட் சட்டம் இந்தியாவின் நலனுக்கு எதிரானது என்று ஆதாரத்துடன் குறிப்பிட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்காவுடனான அணு உடன்பாடு குறித்து எழுப்பப்பட்ட அச்சங்களுக்கு பதில் அளிக்கும் போது அளித்த வாக்குறுதிகளுக்கு முரணாக ஹைட் சட்டம் அமைந்துள்ளதாக இந்த விஞ்ஞானிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். உதாரணமாக இந்திய அணுகுண்டு வெடிப்புச் சோதனையை நிறைவேற்றினால் உடனடியாக இந்த உடன்பாடு முடிவிற்குக் கொண்டு வரப்படும். எனவே எதிர்காலத்தில் இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தினால் அது நமது நாட்டிற்குப் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தி விடும். இறக்குமதி செய்யப்பட்ட அணு உலைகளுக்கு எரிப்பொருள் இல்லாமல் நாம் பெரும் அவதிப்படுவோம்.
. இந்தியாவின் எதிர்கால எரிசக்தி தேவையை நிறைவேற்றுவதற்கு அமெரிக்காவுடனான அணுஆற்றல் உடன்பாடு அவசியம் தேவை என்று உடன்பாட்டின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றார்கள். ஆனால் அமெரிக்காவுடன் அணுஆற்றல் உடன்பாடு மேற்கொண்ட பிறகு அதன் காரணமாக இந்தியாவில் அணுமின் நிலையங்கள் இயங்கத் தொடங்கினாலும் இந்தியாவின் மொத்த எரிசக்தி தேவைகளில் 9 சதவிகிதத்தைக் கூட அது பூர்த்தி செய்யாது. இது எந்த வகையிலும் நமது எரிசக்தி தேவை பரிபூரணமாகிவிடும் என்ற பாதுகாப்பு உணர்வை நமக்கு அளிக்காது. இது மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அணுஉலைகளில் தயாராகும் மின்சாரத்தின் விலை ஒரு யூனிட்டிற்கு அனல் மின்நிலையத்திலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை விட இரு மடங்கு அதிகமாக இருக்கும். நிலக்கரியைப் பயன்படுத்தும் மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு ஆகும் செலவை விட இறக்குமதி செய்யப்படும் அணுஉலைகளைக் கொண்டு இயங்கும் நிலையத்தை உருவாக்க மூம்மடங்கு அதிகமாக இருக்கும். இந்தப் பின்னணியில் நமது தன்மானத்தை அடகுவைத்து விட்டு அமெரிக்காவுடன் அணு ஆற்றல் உடன்பாடு செய்து கொள்வது நமக்குத் தேவையா?

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ண அய்யர் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், "அமெரிக்காவின் பெரும் அணு வர்த்தக நிறுவனங்கள் இந்தியாவை ஒரு பெரும் சந்தையாகக் கருதுகின்றன. தங்கள் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக ஒரு பலவீனமான, இணக்கமான பிரதமரைப் பயன்படுத்தி வருகின்றன. இந்த வர்த்தகத்தின் பாரதூரமான விளைவாக, மக்களவையில் செய் அல்லது செத்து மடி என்ற அடிப்படையில் பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு தயாராகியிருக்கிறார். இந்த அணுஆற்றல் உடன்பாட்டை முன்வைத்து தனது அரசாங்கத்தையே பணயம் வைக்கப் பிரதமர் துணிந்துள்ளார். இந்த வாக்கெடுப்பில் யார் வெற்றிப்பெற்றாலும் சரி நமது நாடு தனது ஒருமைப்பாட்டை, ஒருங்கிணைப்பை, சகோதரத்துவத்தை இழந்து விடும். அமெரிக்க வர்த்தக மூலதனத்தை விரிவாக்குவதற்காக ஜார்ஜ் புஷ் மேற்கொண்ட வலுவான, எதேச்சதிகரமான கொள்கை இந்தியாவின் தேசியக் கொள்கையாக மாறிவிட்டது. நேரு-இந்திராவின் சோசியலிச அணிசேர நிலைப்பாடும், நமது பாரம்பரிய பஞ்சசீலக் கொள்கையும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தின் தேற்றங்களுக்கும், நோக்கங்களுக்கும் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது" என்று மனவெதும்பி எழுதியுள்ளதைத் தங்கள் மேலான பார்வைக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

முன்னாள் பிரதமர் இந்திரா அம்மையாரின் அறிவியல் ஆலோசகராக இருந்த அசோக் பார்த்தசாரதி எழுதியுள்ள ஒரு விரிவான கட்டுரையில் அமெரிக்காவுடன் செய்து கொள்ளும் உடன்பாடு நமது நாட்டு நலனுக்கு எதிரானது என்று ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளார்.

பாசிசச் சக்திகளின் கையில் ஆட்சி சென்று விடக் கூடாது என்பதற்காகத் தங்களுடைய பெரும் முயற்சியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உருவாக்கப்பட்டது. நமது நாட்டிற்குச் சாதகத்தை விடப் பாதகங்களை ஏற்படுத்தக் கூடிய அமெரிக்காவுடனான அணுஆற்றல் உடன்பாட்டை முன்வைத்து மதசார்பற்ற சக்திகளின் ஐக்கியம் நம்பிக்கை வாக்கெடுப்பின் காரணமாக பிளவுப்பட உள்ளது பெரும் வேதனையை அளிக்கின்றது. தாங்கள் இப்பிரச்னையில் தலையிட்டு அமெரிக்காவிடம் நமது நாட்டு நலனை அடகு வைக்கும் அணுஆற்றல் உடன்பாட்டைக் கைவிட மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாகப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நாட்டில் மதசார்பற்ற சக்திகள் ஒன்று சேர்ந்திருப்பதைவிட அமெரிக்காவின் நலனே பெரிது என்று காங்கிரஸ் கட்சி முடிவுச் செய்தால், இடதுசாரி கட்சிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக எடுத்து நமது நாட்டின் இறையாண்மையை, சுதந்திரத்தை , ஐக்கியத்தை, தன்மானத்தைக் காக்க முன்வரவேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

Saturday, July 5, 2008

சேது ராம்....போதும் ராம்..


மக்களுக்கும் நாட்டிற்கும் பயன ளிக்கக்கூடிய சேது சமுத்திரத் திட்டத்தை முடக்குவதற்காக இந் நாட்டின் உயர்சாதி ஆதிக்க கும்பல் செய்யும் அட்டூழியம் பொறுமையு டையோரையும் பொங்கியெழச் செய்யும். இயற்கையாய் உருவான மணல் திட்டை லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னாள் குரங்கு களால் கட்டப்பட்ட இராமர் பாலம் என்று கதை சொல்லி இந்த நாட்டின் உச்சநீதிமன்றம் வரை அதை ஆமோதிக்க வைத்திருக்கும் கொடுமை கல்வியறிவற்ற ஆப் பிரிக்க நாடுகளில் கூட நடக்காது.

மத்திய அரசை இயக்கிவரும் அரசியல் சூத்திரதாரி, தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி, தற்போதும் தமிழகத்தை ஆண்டுவரும் கலை ஞரால் கூட சேது சமுத்திர திட் டத்தை நிறைவேற்ற முடியவில்லை என்றால் இந்த நாட்டை ஆண்டுக் கொண்டிருப்பது மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசாங்கங்களா? அல்லது உயர்சாதி ஆதிக்கக் கும்பலா? என்கிற கேள்வி ஒவ் வொரு இந்தியக் குடிமகனின் மனதிலும் தொக்கி நிற்கிறது.

தமிழக முதல்வர் கலைஞர் தனது பிறந்த நாள் செய்தியில் சேது சமுத்திர திட்டத்தை பெயர் மாற்றி சேதுராம் என்று நிறைவேற்றி னால்கூட போதும் என்று கூறியது ஆச்சரியத்தை மட்டுமல்ல, அதிர்ச்சி யையும் ஏற்படுத்தியது. கலைஞரின் அறிவிப்பு ஆதிக்க சக்திகளிடம் சரணாகதி அடைந்து விட்டதை காட்டுகிறதா? அல்லது இதுவும் ஒருவகை இராஜதந்திரமா? எனப் புரியவில்லை.

எவ்வளவோ திட்டங்களை அரசாங்கங்கள் கொண்டு வந்தும் கூட மக்கள் விரோத தன்மையி னால் அவையெல்லாம் வெகுஜன புரட்சியினால் செயல்பட முடியாமல் போனதுண்டு. ஆனால் வெகுஜன மக்களால் வரவேற்கப்படுகிற ஓர் அரசு திட்டத்தை இந்நாட்டின் சிறு பான்மையிலும் சிறுபான்மையான ஒரு கூட்டத்தால் புராணங்களின் பெயரை சொல்லி தடுக்க முடிகிற தென்றால் இச்சதிகாரர்களின் கைக ளில்தான் இன்றளவும் ஆட்சி, உண்மையான ஆட்சி, அதிகாரங் கள் இருப்பது தெளிவாகிறது. ஆட்சியில் இல்லாமலேயே எந்த மக்கள் செல்வாக்கும் இல்லாம லேயே அமைச்சரை பதவியிழக்க வைக்கவும் ஆட்சியாளர்களை பயமுறுத்தவும் இந்த நரிகளால் முடிகிறது. இவர்களை திருப்தி படுத்துவதற்காகவே சிறுபான்மை மக்களை தீவிரவாதிகள் என முத்திரை குத்தும் அளவுக்கு கீழிறங்குகின்றனர். சிறுபான்மை மக்களின் ஓட்டை தின்னு கொழுத்தவர்கள்.

ஆனால் ராமர் பெயரைச் சொல்லி பாபரி மஸ்ஜிதை இடித்த கயவர் கும்பல் சேது சமுத்திர திட் டத்தை முடக்குவதை முஸ்லிம் சமுதாயம் இனியும் வேடிக்கைப் பார்க்கத் தயாராய் இல்லை. உச்ச நீதின்றம் உறுதிமொழி அளித்தும், ராணுவத்தின் கண்முன்னே பாபரி பள்ளியை கடப்பாரைக்கு காவு கொடுத்த சமுதாயம், ஆதம் பாலத்தை இராமர் பாலமாக்கி வரலாற்று மோசடியை செய்தபோது வேடிக்கைப் பார்த்த சமுதாயம் கிளர்ந்தெழும் நாள் வெகுதொலை வில் இல்லை.

ஆட்சியில் உள்ளவர்கள் ஆயிரம் சால்ஜாப்புகள் சொல்லலாம். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்கள் கிளர்ந்து எழுந்தால் அவதார கதை விடும் அரைவேக்காடுகள் அழி வது மட்டும் உறுதி.

ராமர் பெயர் சொல்லி ஆட்டம் போடும் ஆதிக்கக் கும்பல் அதற் குள் அடங்குவது நல்லது.

Thursday, July 3, 2008

பாஜகவுக்கு மகுடம் சூட்டும் காங்கிரஸ்?

அமெரிக்கா உடனான அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் மத்திய அரசுக்கு அழித்து வரும் ஆதரவை விலக்கி விடப் போவதாக கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ எனப்படும் உயர் மட்டக் குழு அறிவித்துள்ளது. காங்கிரஸ் அரசுக்கு மதவாத அமைப்புகள் ஆட்சிக்கு வருவதை பற்றிய கவலை இல்லை. ஆனால் அமெரிக்காவுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும். என்பதில்தான் கவலை எனவும் குற்றம் சாட்டியுள்ளது. தொடக்கத்திலிருந்தே அமெரிக்காவுடனான ஒப்பந்தம் கூடாது என்று இப்பிரச்சனையில் கம்யூனிஸ்ட் கட்சி தெளிவான நிலைப்பாட்டில் இருந்து வருகிறது. அதற்காக ஆட்சியே கவிழ்ந்தாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு தயாராகி விட்டனர் கம்யூனிஸ்ட்கள். அதைத்தான் பொலிட் பீரோவின் முடிவும் எதிரொலித்துள்ளது.

அதே போல் காங்கிரஸ் கட்சியும் அமெரிக்க ஒப்பந்ததில் கையெழுத்து இடுவதில் பிடிவாதமாக உள்ளது.அக்கட்சி யின் தலைவி சோனியாவும் தேர்தலை சந்திக்க தயாராகுங்கள் என்று கட்சியினருக்கு கட்டளையிட்டுள் ளார். எனவே அமெரிக்க நலனுக்காக நாடு இன்னொரு தேர்தலை சந்திக்க தயாராகி விட்டது. எந்த நாட்டின் ஸ்திரத்தன்மைக்கும் ஆபத்து அமெரிக்கா மூலமாகவே வருவதை நமது நாட்டு நிகழ்வுகளே காட்டுகின்றன.

ஆட்சியே போனாலும் பரவாயில்லை என்ற அளவுக்கு காங்கிரஸ் இவ்வொப்பந்தத்திற்கு வக்காலத்து வாங்குவதன் பின்னனிதான் நமக்கு புரியவில்லை.

கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கான அகில இந்திய ஒதுக்கீடு, பாபரி மஸ்ஜித் பிரச்சனை, கிருஷ்ணா கமிஷன், குஜராத் இனப்படுகொலை போன்றவற்றில் இது போன்ற அதி தீவிர நிலைப்பாட்டை காங்கிரஸ் எடுத்திருந்தால் காங்கிரஸ் கட்சிக்காக 50 வருட காலமாக ஓட்டளித்து வந்த சிறுபான்மை முஸ்லிம்களுக்கு கொஞ்சம் நன்றி சொன்னாற் போல் இருந்திருக்கும். ஆனால் அதற்கெல்லாம் சிறு துரும்பு கூட எடுத்துப் போடாத காங்கிரஸ் கட்சிக்கு தங்கள் முதலாளிக்கு அடிமை சேவகம் செய்வதை யாராவது தடுத்து விட்டால் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. தலையே போனாலும் பரவாயில்லை தேர்தலுக்கு தயாராவோம் என முழங்குகிறது.

சமையல் எரிபொருள், பெட்ரோல், டீசல் என ஒட்டு மொத்த விலைவாசி ஏற்றங்களால் கடுப்பில் இருக்கும் மக்களிடம் எந்த முகத்தை வைத்து இவர்கள் ஓட்டு கேட்பார்கள் என்று புரியவில்லை. அமெரிக்க நட்பு காங்கிரஸுக்கு நிதாமின்மையை ஏற்படுத்திவிட்டது தெரிகிறது. மதவாத பாஜகவுக்கு மகுடம் காங்கிரஸால் தான் ஏறப் போகிறது. அது போன்று நிகழ்ந்தால் காங்கிரஸ் கட்சியை எதிர்கால சந்ததியும் மன்னிக்காது

source :tmmk

Wednesday, July 2, 2008

அன்று ஆங்கில அரசின் கைகூலிகள், இன்று இந்திய அரசின் உயர்பதவிகள்


அன்று இந்திய விடுதலைக்கு போரடி உயிர் தியாகம் செய்த போராளிகளின்வாரிசுகளோ இன்று குடிசையில் , ஆங்கில அரசுக்கு கைகூலியாவும், விடுதலைபோரளிகளை காட்டிக்கொடுப்பதுமே தனது வேலையாக செய்த பார்பனர்களோமாடமாளிகையில். இதுதான் இந்திய அரசாங்கம் நமக்கு கொடுத்த பரிசு.
இந்திய மக்கள் தொகையில் வெரும் 5 சதவீதம் இருக்கும் பார்பனர்களோ 60 சதவீதம் இந்திய உயர்பதவி வகிக்கின்றனர். கீழேக் கொடுக்கப்பட்டுள்ளபுள்ளிவிவரம் 1989லேயே இந்திய உயர்பதவிகளிள் பார்பனர்களின் பங்களிப்பை எடுத்துரைக்கிறது.

Loksabha
48% are Brahmins

Rajyasabha
36 % are Brahmins

Governor/L.G.
50 % are Brahmins

Secretary to Governor/ L.G.
54 % are Brahmins

Union Cabinet Secretaries
53 % are Brahmins

Chief Secretaries to Minister
54 % are Brahmins

Private Secretaries to Minister
70 % are Brahmins

JS/ Additional Secretaries
62 % are Brahmins

Vice-Chancellors to Universities
51% are Brahmins

Supreme Court Judges
65 % are Brahmins

High Court Judges/ Addl. Judges
50 % are Brahmins

Ambassadors
41% are Brahmins

Chief Executive of Central Public undertaking:
57 % are Brahmins

Chief Executives of State Undertakings
82 % are Brahmins

(Courtesy: Voice of the Week , Oct. 1989)

இன்ன பிற துறைகளில்




Banks 57% are BrahminsAirlines 61 % are BrahminsIAS Offices 72% are BrahminsIPS Office 61 % are BrahminsRadio & TV 83% are BrahminsCBI, Customs & Central Excise 72% are Brahmins
மேலே குறிப்பிட்ட தகவல்கள் இன்னும் ஒரு முறை சாட்சி பகறுகிறது ' இதுஜனநாயக நாடு அல்ல, பிராமண நாடு '.
இன்றே உறுதிமொழி ஏற்போம். அந்நியரிடமிருந்து நாட்டை மீட்போம். புதிய இந்தியாவை படைப்போம்.


மொழிபெயர்ப்பு: திராவிட முஸ்லிம்

முஸ்லிம் அமைப்புகள் மீது புகார் கூறும் இந்து மக்கள் கட்சியினர்...


"வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் ஏரியில் 1600 ஆண்டுகளுக்கு முந்தய பல்லவர் காலத்து பழமை வாய்ந்த கல்லாலான 7 அடி உயரம் கொண்ட லிங்கம் ஒன்று, கடந்த மார்ச் 27 ஆம் தேதி அதிகாலை பயங்கர சத்தத்தோடு வெடித்து சிதறியது". இத்தகைய சிறப்புமிக்க பழமை வாய்ங்க்த லிங்கத்தை இஸ்லாமிய தீவிரவாதிகள் வெடிவைத்து தகர்த்துள்ளனர் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் ஸ்ரீதரன் புகார் அளித்துள்ளார்.

மேலும் சிறப்புமிக்க வேலூர் கோட்டையில் உள்ள மசூதியை மீண்டும் தொழுகை நடத்தப்போவதாக வக்போர்ட் வாரியத்தலைவர் அறிவிப்பை எதிர்த்து ' அந்த மசூதி தொழுகை ஏற்றதல்ல என்று முன்னால் எம்.பி. அப்துல் சமத் அரசுக்கு எழுதி கொடுத்துள்ளார் ' என்றும் ஸ்ரீதரன் சுட்டி காட்டியுள்ளார். மேலும் இதை எதிர்த்து வரும் ஏப்-10 ஆம் தேதி வேலூர் கோட்டை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் வரும் ஏப்-14 ஆம் தேதி நெல்லை சீமையில் இந்து மக்கள் கட்சி சார்பாக "தாய்சமயம் திரும்பும் திருவிழா"நடக்க விருப்பதாக அறிவித்துள்ளனர். எனக்கோர் கேள்வி எழுகிறது ஒருவர் கிருஸ்துவமதத்திலிருந்து இந்துவாக மாறுகிறார் என்றால் அவரை உங்கள் 1008 ஜாதியில் எந்த ஜாதியில் சேர்ப்பீர்கள் பிராமணர்களிளா ? தாழ்த்தப்பட்டவர்களிளா?. மேலும் இந்து தொலைக்காட்சியும் உதயமாகப் போகிறதாம்.

தமுமுக மீது பொய்வழக்கு போடும் காவல் துறை

தினமலர் நாளிதழுக்கு நமது மக்கள் தமிழகத்தில் வைத்துள்ள பெயர்த் தினமலம். முஸ்லிம்கள் தொடர்பான பொய் செய்திகளைப் பிரசுரிப்பது அதன் அன்றாட வாடிக்கை, அத்தகைய ஒரு செய்தி தான் கீழக்கரை பெண் தொடர்பான செய்தி. அந்தப் பெண் பெரியப்பட்டணத்தைச் சேர்ந்த ஒருவருடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் உடனே தமுமுக நகரத் தலைவர் உட்பட நிர்வாகிகள் அந்த இருவரையும் கட்டி வைத்து அடித்ததாகவும், அப்பெண்ணைப் மானபங்கம் படுத்தியதாகவும், தமுமுக நிர்வாகிகளைக் காவல்துறை கைதுச் செய்யததாகவும் தினமலர்ப் பொய் செய்தி வெளியிட்டுள்ளது. தவறு செய்த பெண்ணையும் ஆணையும் கீழக்கரை கிழக்குத் தெரு ஜமாஅத்தை சேர்ந்தவர்கள் தமுமுக விடம் ஒப்படைத்தார்கள். தமுமுக அவர்களைக் காவல்துறையிடம் ஒப்படைத்தது. கீழக்கரை காவல்நிலையத்திற்கு அன்று பொறுப்பில் இருந்த சிக்கல் ஆய்வாளர் இம்மானுவேல் ராசகுமார் என்பவர் வேண்டுமென்றேத் தமுமுகவினர் மீதுள்ள தனது சொந்தப்பகையைத் தீர்த்துக் கொள்ளத் தமுமுகவினர் மீது வழக்குப்போட்டுத் தினமலருக்குச் செய்தியை அளித்துள்ளார். சம்பவம் நடைபெறும் போது கீழக்கரை தமுமுக தலைவர் சிராஜுத்தீன் சென்னையில் இருந்தார். அவர் மீதும் வழக்கு. தற்போது பொறுப்பில் இல்லாத முன்னாள் மாவட்டச் செயலாளர் நிஸ்பர் மீதும், தற்போது வளைகுடாவில் பணியாற்றிக் கொண்டிருக்கும் இரண்டு தமுமுக சகோதரர்கள் மீதும்; பொய் வழக்கப் போட்டுள்ளார். ராமநாதபுர காவல்துறை கண்காணிப்பாளரிடம் தமுமுக புகார் தெரிவித்து வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது. சம்பந்தப்பட்ட பெண் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் கீழக்கரை எஸ். ஐ.யின் நச்சரிப்பால் பொய் புகார் அளித்தேன் என்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். பொய் செய்தியைப் பிரசுரித்த தினமலருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

திரு நெல்வேலி முஸ்லிம்களுக்கு பாஸ்போட் கொடுக்க மறுக்கும் தமிழக காவல் துறை..

தமிழக காவல் துறை பாஸ்போட்க்கு விண்ணப்பித்திருந்த தென் காசி , மேலப்பாலயம், பொட்டல்புத்தூர், சங்கரங்கோயில், கல்லிடைகுறிச்சி சேர்ந்த முஸ்லிம்களின் பாஸ்போட்க்களை ரத்து செய்துள்ளது.


TIRUNELVELI: IF you are a Muslim in Tirunelveli and seek a passport, chances are that your application is either rejected or you may have to wait interminably for it.

Muslims here said police cite “possible or suspected links” of Muslim applicants with banned outfits and refuse clean chits to their applications.

Tamil Nadu Muslim Munnetra Kazhagam district secretary Usman said, “Police suspect Muslims.” In Tenkasi, more than 200 applications have been rejected or are awaiting police clearance.

The figures for some other prominent areas are: Melapalayam - 60, Shenkottah - 15, Sankarankoil - 20, Pottalputhur - 7, and Kallidaikurichi - 8.

Justifying the “extra caution” a police official said when Kadayanallur police recently arrested a group of Muslims, 99 per cent of the arrested gave fake names and addresses.

“If a police official gives a clean chit for passport processing of any such individual, he or she would come under the scanner.”

Source: newindpress

Thursday, June 12, 2008

State balm for docs:

June 10: The state government on Tuesday informed that it had allowed even those who had not approached the court, also to participate in the counseling for 16 post graduate medical specialty courses.
There had been widespread protects across the state against the ‘treatment’ meted out by the police to doctors who had turned up at the Director of Medical Education (DME) for counseling for admission to the courses on Monday, The Medical students in the state boycotted the classes, protesting against lathicharge.
Meanwhile, the BJP sought “appropriate action on officials responsible for the irregulaties” in the counseling doctors for MD\MS seat. According to party’s state general secretary Dr.Tamizhisai Soundrajah, the police action on the striking doctors was highly condemnable.
The Madras high court had on June 9 permitted the DME to hold counseling for these specialties courses. According the DME allowed counseling for the candidates, including 21 petitioners who had approached the court. However, non-service candidates who had not gone to the court insisted the DME to include them in the counseling and indulged in an agitation. The protest ended in a road roko leading to lathicharge by police.
On Tuesday, the government told the Madras high court that due to the prevailing situation, it had allowed even those who had not filed writ petitions, to take part in counseling for 16 PG Medical Specialties courses.
Recording the submission by additional advocate general N.Kannadasan, Justice K.Venkataraman said, “It is needless to say that the selection is subject to the result of the writ petitions”. The Clause envisaged reservation of the entire 50 per cent of seat in these 16 specialties for in-service candidates. The remaining would go to the all India quota. As per this clause, the non-clinical specialties which would not serving candidates include pathology, bio-chemistry and forensic medical
June 10: The state government on Tuesday informed that it had allowed even those who had not approached the court, also to participate in the counseling for 16 post graduate medical specialty courses.
There had been widespread protects across the state against the ‘treatment’ meted out by the police to doctors who had turned up at the Director of Medical Education (DME) for counseling for admission to the courses on Monday, The Medical students in the state boycotted the classes, protesting against lathicharge.
Meanwhile, the BJP sought “appropriate action on officials responsible for the irregulaties” in the counseling doctors for MD\MS seat. According to party’s state general secretary Dr.Tamizhisai Soundrajah, the police action on the striking doctors was highly condemnable.
The Madras high court had on June 9 permitted the DME to hold counseling for these specialties courses. According the DME allowed counseling for the candidates, including 21 petitioners who had approached the court. However, non-service candidates who had not gone to the court insisted the DME to include them in the counseling and indulged in an agitation. The protest ended in a road roko leading to lathicharge by police.
On Tuesday, the government told the Madras high court that due to the prevailing situation, it had allowed even those who had not filed writ petitions, to take part in counseling for 16 PG Medical Specialties courses.
Recording the submission by additional advocate general N.Kannadasan, Justice K.Venkataraman said, “It is needless to say that the selection is subject to the result of the writ petitions”. The Clause envisaged reservation of the entire 50 per cent of seat in these 16 specialties for in-service candidates. The remaining would go to the all India quota. As per this clause, the non-clinical specialties which would not serving candidates include pathology, bio-chemistry and forensic medical

Friday, June 6, 2008


A court in India has convicted 14 Hindus of killing 116 Muslims in October 1989 in Bhagalpur (Bihar) during some of the country's bloodiest religious rioting. Sentencing is expected on June 27.
The trial, which lasted for years, involved 24 people charged in the case. Six have since died and four are still on the run.
In 1989 Hindu extremists attacked Muslims after a procession to a Hindu holy site in Ayodhya. More than a thousand people were killed in the violence that lasted for weeks.
Men, women and children were butchered and their bodies dumped into a mass grave on which cauliflowers were planted to escape detection.
The enormity of the carnage became clear several weeks later when the bodies were found and exhumed.
Local Muslims have demanded justice ever since for what is still considered by many the worst incident of anti-Muslim violence in the history of India.
Over the years courts in Bihar have heard 152 cases relating to the killings, acquitting the accused in 119 of them. Many of those convicted in the other 32 cases were given life sentences.For decades Ayodhya has been the scene of sectarian violence. On December 6, 1992, a Hindu mob attacked and destroyed the Babri Mosque. The rioting that followed around the country claimed an estimated 2,000 lives.- Asia news

Veil remark angers Indian Muslims

Indian Muslim leaders have slammed presidential nominee for her remark on veil urging the governing coalition to drop her candidature.

Pratibha Patil's remark on the purdah (veil) system at a function in Udaipur Monday has upset Muslim leaders across India. Patil said purdah was introduced to save women from Muslim invaders, Indian Express daily reported. "Women have always been respected in the Indian culture. The purdah system was introduced to protect them from the Muslim invaders. However, times have changed. India is now independent and hence, the systems should also change,” Patil said in a function on Maharana Pratap, a Medieval Hindu king who was defeated by the Mongol Emperor Jalaluddin Muhammad Akbar.While historians disagree with Patil's statement on the purdah system, Muslim leaders have also expressed anger asking Premier Manmohan Singh to find a new presidential candidate for the top ceremonial post in the country."Muslims invaders had nothing to do with purdah system in Rajasthan. Here Rajput leaders did not allow their women and daughters to go out without veils," Varsha Joshi of the Institute of Rajasthan Studies said, adding the veil was prevalent in the state even during the 11th Century, much before Muslim invaders entered India.Mohammad Salim, state president of Jamat-e Islami Hind has also denounced the statement saying her views are similar to those of the Hindu fanatics."It was quite surprisingly that Patil, who is believed to be a well-read and educated person, can have such views,” Salim said.Muslims account for nearly 14 percent of India's nearly 1.1 billion people. There is no strict rule on veil among Muslims as the practice is also found among women belonging to Hindu families.

Bc Status Must For Muslims-Shahabuddin

Former MP Syed. Shahabuddin demanded that the Central Government should notify Muslims under the BC category and extend 15 per cent reservation to them.
Addressing media persons on Tuesday at Madina Education Centre, Shahabuddin said though they have expected much from the UPA Government when it came to power, the union Government did nothing for the welfare of minorities in general and Muslims in particular for the past three years of its governance.
He wanted the UPA Government to initiate special measures for the upliftment of Muslims in the field of education, employment as was done for the OBCs.
Arguing that the Muslim population was equal to SCs, Shahabuddin maintained that Muslim students were not getting scholarships like their SC counterparts.
Similarly, commercial banks were also not coming forward to give any education loan or extend financial help to the young Muslim entrepreneurs.
To achieve 15 per cent reservations to the Muslims, Shahabuddin said several Muslim organizations in the country have come together and formed into a Joint Committee of Muslim organizations.
The Joint Committee had been organizing agitations in a phased manner from grass root level to the national level.
He said they were planning to give a memorandum to Prime Minister Dr. Manmohan Singh and would hold a rally in New Delhi on the first day of the forthcoming Parliament session demanding BC status to Muslims. (NSS)